நடிகர் தனுஷ், தனது 50-வது படமான “ராயன்” திரைப்படத்தை அவரை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சந்திப் கிஷான், துஷாரா விஜயா, அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ராயன் திரைப்படம் நேற்று(27-07-2024) தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் தியேட்டர்களில் வெளியானது. இப்படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் முந்தைய படங்களான கேப்டன் மில்லர், கர்ணன், வாத்தி ஆகிய திரைப்படங்களை ஒப்பிடும் பொழுது ராயன் திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தநிலையில், திருவனந்தபுரம் தியேட்டரில் ரிலீஸ் ஆன ராயன் படத்தை வீடியோ எடுத்த மதுரையை சேர்ந்த ஸ்டீபன்ராஜ்(32) என்பவரை கேரளா சைபர் கிரைம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்டீபன்ராஜ், பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும் போது அதனை தியேட்டரின் இருக்கையில் சிறிய கேமரா வைத்து வீடியோ எடுத்து படத்திற்கு 5000 ரூபாய் கமிஷன் பெற்று இணையதளத்தில் பதிவேற்றம் செய்து வந்தது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் அவரை கைது செய்தனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.