திருச்சி கலெக்டர் அலுவலகம் சாலையில் ஒரு தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு வெளியே சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் வாலிபர்கள் சிலர் ஒன்றுகூடி பேசிக் கொண்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கண் டோன்மென்ட் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அங்கு நின்று பேசிக் கொண்டிருந்த வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். போலீசார் அவர்களை விரட்டி சென்று 5 பேரை மடக்கி பிடித்தனர். மேலும், அந்த வாலிபர்கள் பயன்படுத்திய 3 கார்களை போலீசார் பறிமுதல் செய்து சோதனை இட்டபோது அதில் ஏராளமான அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள், ஊசிகள் இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்கள், யாரையாவது கொலை செய்ய வந்தார்களா? கொள்ளை அடிக்க திட்டம் தீட்டினார்களா? என்பன போன்ற கோணங்களில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருச்சியில், பயங்கர ஆயுதங்களுடன் 5 பேர் கொண்ட கும்பல் பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed.