திருச்சி பாலக்கரை பீமநகர் பகுதியை சேர்ந்தவர் தேவகி ( வயது 41). இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 5 மாதம் கர்ப்பமாக இருந்தார். அவருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்படவே திருச்சி அரசு மருத்துவமனை எதிரே உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிர் இழந்தார். ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன்பு இதேபோன்று திருச்சியை சேர்ந்த சண்முகப்பிரியா என்ற பெண் வழக்கறிஞர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தற்போது அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு பெண் வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் திருச்சி வழக்கறிஞர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.