Rock Fort Times
Online News

டெல்லியில் கடுமையான பனிமூட்டம்: 30 விமானங்கள் தாமதம்…

கடுமையான பனிமூட்டம் காரணமாக புதுடெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக புதுடெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று(26-12-2023) காலை முதல் பல்வேறு இடங்களுக்கு புறப்பட வேண்டிய 30 விமானங்கள் கால தாமதத்துடன் புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து பயணிகள் அந்தந்த விமான சேவை நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக விமான சேவையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

work from home job போல அரசியல் ! நடிகர் விஜய்யை விமர்சனம் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

1 of 940

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்