தமிழக அரசை கண்டித்து ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் 31ம் தேதி ஆர்ப்பாட்டம்… * நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்க அழைப்பு!
தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் குழந்தைகள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் கூறி, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைப் பாதுகாக்கத் தவறியதாகக் குற்றம்சாட்டி, தவெக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து, திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக சார்பில், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினைகளைக் கண்டித்து வருகிற
31.10.2026 (சனிக்கிழமை) அன்று காலை 9 மணியளவில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக மகளிரணி, மகளிர் தொண்டரணி முன்னிலையில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு- பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.