Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் நாளை (அக்.30) குடிநீர் வினியோகம் ரத்து…!

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரை மட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் இன்று (29-10-2026 ) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் இடங்களான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜநகர் புதியது, சுந்தராஜநகர் பழையது, ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை பழையது, ரெங்கா நகர் , சுப்ரமணிய நகர் புதியது, வீ .என் .நகர் புதியது, தென்றல் நகர் புதியது, கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி புதியது, கிராப்பட்டி பழையது, அன்பு நகர் பழையது, அன்பு நகர் புதியது, எடமலைப்பட்டி புதூர் புதியது, பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர் இ.பி.காலனி, அரியமங்கலம், மலையப்ப நகர் புதியது, மலையப்ப நகர் பழையது, ரயில் நகர் புதியது, ரயில் நகர் பழையது, முன்னாள் ராணுவத்தினர் காலனி புதியது, முன்னாள் ராணுவத்தினர் காலனி பழையது, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபீஸ், நாகம்மை வீதி, நூலகப் பகுதி, பொன்னேரிபுரம் புதியது, பொன்னேரிபுரம் பழையது, அம்பேத்கார் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி.காலனி புதியது, விஸ்வநாதபுரம், கே.சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த நகர், சுப்ரமணிய நகர், சத்தியவாணி முத்து நகர், கே கே நகர், அம்மா மண்டபம், ஏ.ஐ. பி.இ.ஏ. நகர், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்கோவில், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம், உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் நாளை (30.10.2026) ஒரு நாள் குடிநீர் வினியோகம் இருக்காது. 31.10.2026 அன்று முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும்
என மாநகராட்சி ஆணையர் பொன்மணி தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்