Rock Fort Times
Online News

மக்களின் தேவை அறிந்து செயல்பட வேண்டும்: அமைச்சர்களுக்கு முதல்வர் விஜய் உத்தரவு…!

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னையில் இன்று(29-10-2026) நடைபெற்றது. கூட்டத்தின் போது, அரசின் திட்டங்கள் மற்றும் மக்கள் நலப் பணிகள் குறித்து ஆய்வு செய்த விஜய், அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். கூட்டத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்தினரின் சமூக, பொருளாதார நிலையை ஆய்வு செய்யக் கணக்கெடுப்பு நடத்த ஆணையம் அமைக்க முடிவு
செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கூட்டத்தில் முதல்வர் பேசுகையில்,

மக்களுக்கு என்ன தேவையோ அதற்குத்தான் முன்னுரிமையும் முக்கியத்துவமும் கொடுக்கப்பட வேண்டும். பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து, அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அமைச்சர்கள் தங்களது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் சமூக வலைதளத்தில் வெளியாகும் எதிர்மறை கருத்துகளால் தொய்வடைய வேண்டாம்; தொடர்ந்து நம்பிக்கையுடன் பணியாற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்