Rock Fort Times
Online News

திருச்சியில் நடந்து சென்ற பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு – கவரிங் எனத் தெரிந்ததும் ரோட்டில் வீசிச் சென்ற திருடன்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு பெண், ராகவேந்திரா கார்டன் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு ஆண், அந்த பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் சங்கிலியை பிடித்து இழுத்தார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த பெண், அந்த நபரிடம் போராடினார். இருந்தாலும் அந்த நபர், அந்தப் பெண் அணிந்து இருந்த தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு
ஓடினார். சிறிது தூரம் சென்றதும் அந்த நபர், தான் பறித்த தாலிச் சங்கிலியை பார்த்துள்ளார். அப்போது அது கவரிங் என்பது தெரிந்ததும் ரோட்டில் தூக்கி வீசிவிட்டு அங்கிருந்து விரக்தியுடன் சென்றார். இந்த காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிடிவியில் பதிவாகியுள்ளது. அதற்கான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்