மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாமன்னன் இராஜராஜ சோழனின் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி மாத சதய நட்சத்திரத்தையொட்டி, ஆண்டுதோறும் தஞ்சாவூர் பெரிய கோயிலில் சதய விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு 1041- வது சதய விழா அக்டோபர் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி பந்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று(10-10-2026) நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மங்கல நிகழ்வுகளுடன் பந்தல்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சதய விழாக் குழுவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாமன்னர் ராஜராஜ சோழனின் வரலாற்றையும், அவரது ஆட்சிச் சிறப்பையும் போற்றும் வகையில் நடைபெற உள்ள சதய விழாவிற்கான ஏற்பாடுகள் தற்போது பெரிய கோயில் வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. விழாவினை முன்னிட்டு வருகிற 22 ம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.