டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்… * 500 பேர் தடுப்புக் காவலில் வைப்பு..!
அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறியும், அவர் பதவி விலக வலியுறுத்தியும் தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று(10-10-2026) கரப்பான் பூச்சி ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில், இளைஞர்கள் பங்கேற்பதை தடுப்பதற்காக, நேற்று இரவு 9 மணி முதல் இன்று வரை, டெல்லியில் 57 மெட்ரோ ரெயில் நிலையங்களை மூட மெட்ரோ நிர்வாகத்துக்கு டெல்லி போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். மேலும், நாடு முழுவதும் இருந்து டெல்லிக்கு வரும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் திட்டமிட்டபடி, போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பல்வேறு இடங்களிலிருந்து வெவ்வேறு குழுக்களாக வந்த சுமார் 500 பேரை டெல்லி காவல்துறையினர் தடுத்து வைத்தனர். அதேவேளையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குற்றப் பின்னணி கொண்ட சுமார் 50 பேரும் பிடித்து வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளதால் டெல்லியில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Comments are closed.