சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணியை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த சாந்தி, அவரது கணவர் மகேந்திர சிம்ஹன், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் கணேசன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு வீரமணி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட போது, அவரை கைது செய்யாமல் இருப்பதற்காக பல கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் மற்றொரு புகாரின் அடிப்படையில், ஜெம் வீரமணி மீது இரண்டாவது போக்சோ வழக்கு அண்மையில் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்ஹன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் இன்று (அக்.1) உத்தரவிட்டார்.

Comments are closed.