தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து, அந்தக் கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் நாளை(அக். 2) தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார். அமராவதி சிலையில் இருந்து பொள்ளாச்சி சாலை பெரிய கடை வீதி வழியாக சாலைவலம் சென்று வாக்கு சேகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து, மாருதி நகர் அருகே நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் முன் நின்று செய்து வருகின்றனர்.

Comments are closed.