Rock Fort Times
Online News

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை(அக்.2) பிரம்மாண்ட ரோடு ஷோ…!

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் தவெக, அதிமுக, திமுக, நாதக, இடதுசாரிகள் என ஐந்து முனைப் போட்டி நிலவுகிறது. இதனையொட்டி, இடைத்தேர்தலில் வெற்றி பெறும் நோக்கில் அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமாரவேலை ஆதரித்து முதல்வரும் தவெக தலைவருமான விஜய் நாளை (அக். 2) சாலைவலம் செல்லவிருக்கிறார். மாமண்டூர், படாளம், கருங்குழி அய்யனார்கோயில், பெரும்பாக்கம், மேல்மருவத்தூர் வழியாக அச்சரப்பாக்கம் செல்கிறார். மாலை 4 மணி தொடங்கி இரவு 9 மணிவரையில் கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவுக்கு முதல்வர் சாலைவலம் மேற்கொள்கிறார். இதற்கிடையே, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் முதல்வர் விஜய் வழிபாடும் நடத்துகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்