Rock Fort Times
Online News

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை… * தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை..!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் மற்றும் வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் போது அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. அதாவது, சில தனியார் மருத்துவமனைகளில், டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சாதாரண சிகிச்சைக்கு ரூ.22 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் ரூ.75 ஆயிரம் முதல் ரூ.2 லட்சம் வரையும் கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. மேலும், இதுபோன்ற புகார்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்