Rock Fort Times
Online News

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழக சபாநாயகர் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை…!

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவின்படி, இன்று (15.09.2026) தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் மற்றும் அமைச்சர்கள் என்.ஆனந்த், டாக்டர் அருண்ராஜ், ராஜ்மோகன், டாக்டர் டி.கே.பிரபு, வன்னி அரசு, விஜய் தமிழன் பார்த்திபன், குமார் ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்