திருச்சி ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை சார்பில் ஒரு நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம்: நாளை(ஆகஸ்ட் 16) நடைபெறுகிறது..!
திருச்சி, வயலூர் ரோடு, சீனிவாசா நகர் 5வது கிராஸில் ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் இம்மருத்துவமனையில், சித்தா மற்றும் இயற்கை மருத்துவ முறையில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இயற்கையான உணவு முறைகள், யோகா, தியானம் மற்றும் முத்திரைகள் மூலம் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், வெரிகோஸ் வெயின் உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகளுக்கு ஸ்ரீ ஜெயரங்கா இயற்கை மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சுகுமார் ஆலோசனைகள் வழங்கி வருகிறார். அந்தவகையில் நாளை (ஆகஸ்ட் 16) ஞாயிற்றுக்கிழமைஒரு நாள் இயற்கை வாழ்வியல் பயிற்சி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் எண்ணெய் மற்றும் கொதிக்க வைத்த உணவுகளை தவிர்த்து இயற்கை உணவு முறைகள், யோகா, தியானம் மற்றும் முத்திரைகள் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வது, மேலும் மசாஜ், மண்சட்டி, பாத அழுத்த சிகிச்சை உள்ளிட்ட இயற்கை சார்ந்த சிகிச்சை முறைகளும், இயற்கை வாழ்வியல் பயிற்சிகளும் வழங்கப்படுகிறது. காலை, மதிய உணவு வசதியுடன், ஒருநாள் பயிற்சி கட்டணமாக ரூ. 1500 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Comments are closed.