தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 118- வது பிறந்த தினம் செப்டம்பர் 15ம் தேதியான இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும், தனியார் அமைப்புகளும் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். இதேபோல, திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில், சிந்தாமணியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநகர் மாவட்ட செயலாளர் ஆவின் சி. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ரத்தினவேல், திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் சி.அரவிந்தன், வழக்கறிஞர் வனிதா, டி.ஆர்.சுரேஷ் குமார், வழக்கறிஞர் முத்துமாரி மற்றும் பகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள்,கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.