திருச்சி மாவட்ட திமுக சார்பில் அண்ணா திருவுருவச் சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை…!
தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் இன்று(15-09-2026) கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையிலான கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் திருச்சி மத்திய மாவட்ட கழக செயலாளர் கே.வைரமணி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி என்.தியாகராஜன்,மாநகர செயலாளர்கள் மு.அன்பழகன் மு.மதிவாணன், மாவட்ட பொருளாளர் அந்தநல்லூர் துரைராஜ், மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஸ்ரீரங்கம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், என்.எஸ்.கருணை ராஜா,குடமுருட்டி சேகர், தில்லைநகர் கண்ணன், மண்டலத்தலைவர் ஜெயநிர்மலா புஷ்பராஜ், கவுன்சிலர் லீலா வேலு, அல்லூர் கருணாநிதி மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, வார்டு, கிளைக்கழக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.