Rock Fort Times
Online News

சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் உயிரிழப்பு…!

தமிழக அமைச்சரவையில் மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ஜெகதீஸ்வரி. இவர் இன்று(07-09-2026) சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக விருதுநகரில் இருந்து காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவரது குடும்பத்தினர் அமைச்சருக்கு சொந்தமான மற்றொரு வாகனத்தில் உடன் சென்று கொண்டிருந்தனர். அமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களும் சென்று கொண்டிருந்தன. சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, அமைச்சர் ஜெகதீஸ்வரியின் குடும்பத்தினர் பயணித்த கார், எதிர்பாராத விதமாக அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இறையன்பு (26) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனையடுத்து, விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரை போலீசார் கைப்பற்றி, போக்குவரத்துக் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்