Rock Fort Times
Online News

திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்கும், தப்பு நடக்கிற இடத்தில்தான் திமுக இருக்கும்…* சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் ஆவேசம்..!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசுகையில்,

கலைஞர் மீது எனக்கு பெரிய மதிப்பு மரியாதை உண்டு. நான் அவர் மீது எந்த குற்றச்சாட்டையும் வைக்கவில்லை, அறிக்கையில் இருப்பதை தான் சொல்கிறேன். மிஸ்டர் கிளீன், மிஸ்டர் கிளீன் என சொல்லிக் கொள்கிறார்களே.. அப்பவே அப்படி என்றால், இப்போது எப்படி இருக்கும். 7.5% முதல் 10% வரை பார்ட்டி பண்ட் வாங்கப்பட்டதாக ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. செய்கின்ற தப்பையே முறையாகவும், ஒழுங்காகவும் செய்து உள்ளார்கள். ஒரு துறை பைலை ஓபன் செய்ததற்கு இப்படி இருக்கிறது என்றால், மற்ற துறை பைலை ஓபன் செய்தால் எத்தனை பூதம் கிளம்பி வரும் என்று தெரியவில்லை. ஆதாரம் வேண்டும்.. ஆதாரம் வேண்டும் என்றீர்கள்.. போதுமா ஆதாரம். தப்பு செய்துவிட்டு மாட்டிக்கிறவர்கள் ஒரு பக்கம். அந்த தப்பிலிருந்து எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்று யோசித்து வைத்துவிட்டு மாட்டிக்காதவர்கள் இன்னொரு பக்கம். நமது தோழர்கள் எல்லாம் இரண்டாவது ரகம். திமுக மேடையில் பேசும்பொழுது பெருமையாக ஒன்று கூறுவார்கள். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்காது.. தப்பு நடக்கின்ற இடத்தில் திமுக இருக்காது என்று கூறுவார்கள். நான் அதை மாற்றிக் கூறுகிறேன். திமுக இருக்கின்ற இடத்தில் தப்பு நடக்கும், தப்பு நடக்கிற இடத்தில்தான் திமுக இருக்கும். ஊழல் என்று சொல்லிவிட்டால் போதும் அனைவரும் எழுந்து நின்று ஆதாரம் கொடு என கேட்பார்கள். ஆனால் இதுவரை நாங்கள் ஊழல் செய்தது இல்லை எனக் கூற மாட்டார்கள். ஊழல் செய்பவர்கள்தான் ஆதாரம் கேட்பார்கள், ஊழல் செய்யாதவர்கள் அதைப் பற்றி கண்டுக் கொள்ளவே மாட்டார்கள்” என கொந்தளித்து பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்