திருச்சி, பொன்மலைப்பட்டி அருகே உள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப் பள்ளியில் மறைக்கல்வி நன்னெறி கண்காட்சி… * ஏராளமான மாணவர்கள் பார்வையிட்டனர்…
திருச்சி, பொன்மலைப்பட்டி அருகே உள்ள புனித ஆக்னஸ் நடுநிலைப் பள்ளியில் திருச்சி மறை மாவட்ட, மறைக்கல்வி நன்னெறி பணி குழு சார்பாக ஆண்டாய்வு நடைபெற்றது. இந்த ஆண்டாய்வில் மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்ற மறைக்கல்வி நன்னெறி சம்பந்தமான கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது. மாணவர்கள் பயன்பெறும் வகையில் நல்லொழுக்கங்களை மென்மேலும் வளர்ப்பதற்கான சூழலை உருவாக்குவதும், நீதி போதனைகளை பற்றி தெரிந்து கொள்ளவும் இந்த கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை திருச்சி மறை மாவட்ட மறைக்கல்வி நன்னெறி பணி குழு செயலர் அருட்பணி பால் கிறிஸ்டோபர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை அருட் சகோதரி சாந்தா ஆகியோர் தொடங்கி வைத்து பார்வையிட்டனர். இந்நிகழ்வில் பணி குழு பொறுப்பாளர்கள், மறைக்கல்வி நன்னெறி ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியை ரோஸி மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏராளமான மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்த்து ரசித்தனர்.

Comments are closed.