Rock Fort Times
Online News

கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கிய முக்கிய நபர்கள் யார் தெரியுமா?- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்..!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசுகையில்,

நாங்கள் மிசாவை பார்த்தோம், மிசாவை பார்த்தோம் என எதற்கெடுத்தாலும் அதை சொல்கின்றனர். ‘பேசி பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டு பழகிய பை’ என கவிஞர் கண்ணதாசன் திமுக குறித்து விமர்சித்திருந்தார். அதனை நான் தற்போது நினைவு கூற விரும்புகிறேன். லோனுக்கு இ.எம்.ஐ. வாங்குவது போல, இன்ஸ்டால்மெண்ட்-ல் கமிஷன் வாங்கியிருக்கிறார்கள்.
டெண்டரில் கட்டாயப்படுத்தி கமிஷன் வாங்கியதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்தும் விசாரணை கமிஷனில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒரு உறுப்பினர், எலும்பை உடைப்பேன் என்று பேசுகிறார். அவர் என்ன ஆர்த்தோ டாக்டரா? திமுகவுக்கு ட்டு போடாதவர்களுக்கு நல்ல சாவு வராது என ஒருவர் பேசுகிறார். இப்படி பேசியதால் தான், இவர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். திமுக எதை செய்தாலும் குடும்பமாக சேர்ந்துதான் செய்வார்கள் போல. கடந்த ஆட்சியில் பார்ட்டி ஃபண்ட் வாங்கியதற்கு ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. 7.5% முதல் 10% வரை பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் லஞ்சம் வாங்கியதாக அமலாக்கத் துறை கூறியுள்ளது
பார்ட்டி ஃபண்ட் வாங்கியதில் முக்கிய நபர்கள் ஸ்டாலின், உதயநிதிதான் என அமலாக்கத் துறை கூறியுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்