Rock Fort Times
Online News

“எதிர்பார்ப்பில் இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிச்சம்” – வேளாண் பட்ஜெட் குறித்து இபிஎஸ் கருத்து…!

தமிழக சட்டப்பேரவையில் இன்று(06-08-2026) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெகவின் வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம்பெறவில்லை. இரண்டரை மணி நேரம் பட்ஜெட் வாசித்ததில் புதிதாக ஒரு திட்டமும் இல்லை. தவெக தேர்தல் வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.மேகதாது குறித்தெல்லாம் ஒன்றுமே இல்லை. பொது பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுத்தோம். வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மதிப்பெண் கொடுக்கலாம். தேர்தல் நேரத்தில் இனிக்க இனிக்க வாக்குறுதி கொடுத்தார்கள். ஆனால் அவை பட்ஜெட்டில் இல்லை. கடந்த திமுக அரசும், இப்போதைய தவெக அரசும் விவசாயிகளை ஏமாற்றி நாடகம் ஆடுகிறது. தேர்தல் வாக்குறுதி போல் பயிர்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. 20 துறைகளை ஒன்றாக இணைத்து வேளாண் பட்ஜெட் என்கிறார்கள். பிறகு ஏன் 20 துறைகளுக்கும் அமைச்சர். வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் 2.35 மணி நேரம் பேசியிருக்கிறார். இது தான் சாதனையாக பார்க்கப்படுகிறது. ஆனால் விவசாய மக்களுக்கு ஒரு பயனும் இல்லை. எதிர்பார்த்து காத்திருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்