தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற அக்டோபர். 6 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை அக். 9ம் தேதியும் நடைபெறுகிறது. தவெக கூட்டணி, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என இந்த இடைத்தேர்தலில்
5 முனைப் போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலையொட்டி முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் அவர்களது வீடுகளுக்கே சென்று தபால் வாக்குகளைச் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக தாராபுரம் தொகுதியில் தபால் வாக்கு சேகரிக்கும் பணி இன்று (செப். 22) தொடங்கியுள்ளது.
இதற்காக தேர்தல் ஆணையத்தின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதியில் மொத்தம் 1,236 தபால் வாக்குகளைப் பெறுவதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டு அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

Comments are closed.