Rock Fort Times
Online News

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம்…* மருங்காபுரியில் தொடங்கி வைத்தார், மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ஆர். கதிரவன்..!

சென்னையில் இன்று(22-09-2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தை’ தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைத்ததோடு மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். அந்தவகையில் மணப்பாறை தொகுதிக்குட்பட்ட மருங்காபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணப்பாறை தொகுதி த.வெ.க.
சட்டமன்ற உறுப்பினர் ஆர். கதிரவன் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை குத்து விளக்கேற்றியும், மாணவர்களுக்கு உணவு பரிமாறியும் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்