Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், ஏலூர்பட்டி அரசு பள்ளியில் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டம்… த.வெ.க.எம்எல்ஏ விக்னேஷ் தொடங்கி வைத்தார்..!

சென்னையில் இன்று(22-09-2026) நடைபெற்ற நிகழ்ச்சியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுடன் தரையில் அமர்ந்து தானும் சாப்பிட்டார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்நிலையில் திருச்சி மாவட்டம், முசிறி அருகே ஏலூர்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 6 புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை முசிறி சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் திறந்து வைத்தார். தொடர்ந்து 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்க திட்டத்தையும் தொடங்கி வைத்ததோடு மாணவர்களுக்கு உணவு பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்