தமிழக சட்டமன்றத்தில் நாளை(ஆகஸ்ட் 7) நான் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வர் விஜய் வாய் திறந்து பதில் சொல்லட்டும்”…* உதயநிதி சவால்!
காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை(07-08-2026) ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அரசு இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்துள்ளனர். தேர்தலின்போது 5 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் முழு பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக முதல்வர் விஜய் வாக்குறுதி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், விவசாயிகளை ஏமாற்றியுள்ளார். காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர சபாநாயகரிடம் கடிதம் வழங்கியுள்ளோம். அப்போது விவசாயிகள் பிரச்சினை குறித்த கேள்விகள் கேட்போம். முடிந்தால், தைரியம் இருந்தால் முதல்வர் விஜய் அவையில் வாயை திறந்து பதில் சொல்லட்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.