தமிழக சட்டமன்றத்தில் வேளாண் பட்ஜெட்டை அந்தத் துறையின் அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.
இதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு;
- சூப்பர் எல் நினோவால் தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதன் பாதிப்பை குறைக்க வேளாண் பல்கலைக்கழகம் தயாரித்துள்ள மாவட்ட வாரியான திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
- மண்வள பாதுகாப்பு இயக்கம் ரூ.600 கோடி மதிப்பீட்டில் அறிமுகப்படுத்தப்படுகிறது.
- 1 லட்சம் விவசாயிகளுக்கு 4 கோடி ரூபாய் செலவில் மண்நல அட்டைகள் வழங்கப்படும்.
- உயிர்ம வேளாண்மையை பரவலாக்க, 20 ஆயிரம் ஏக்கரில் உயிர்ம வேளாண் முறைகளை பின்பற்றும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- தென்னை விவசாயிகளின் நலனுக்காக மொத்தம் ரூ.16 கோடி ஒதுக்கப்படுகிறது. தென்னை நோய் தடுப்பு திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படுகிறது. நிலையான சந்தைவாய்ப்பை உருவாக்க ரூ.22.30 கோடியில் தென்னை பதப்படுத்தும் கழக்கம் அமைக்கப்படும்.
- ப்ளூ பெர்ரி, ட்ராகன் ப்ரூட், பேசன் ப்ரூட், கிவி, அவகாடோ போன்ற பழங்களை மக்கள் தற்போது விரும்பி உட்கொள்வதால் இந்த பழங்களை விவசாயிகள் தனி பயிர்களாகவும், ஊடு பயிர்களாகவும் 930 ஏக்கரில் பயிர் செய்ய ரூ.1.87 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- விவசாயத்தில் பெண்களை ஊக்குவிக்க, வெற்றி வான்மகள் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 100 மகளிர் உட்பட 500 பேருக்கு, ட்ரோன் மூலம் உரம் தெளித்தல் உள்ளிட்ட பயன்பாட்டுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்காக 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயிற்சிப் பெற்றவர்களில் 50 பெண்களுக்கு 50% மானியத்தில் ட்ரோன் வழங்கிட 2.5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் தாக்கல் செய்து வருகிறார்.

Comments are closed.