Rock Fort Times
Online News

திருச்சி மாவட்டம், முசிறி உள்ளிட்ட 5 இடங்களில் வேளாண்மை பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள்…!

தமிழக வேளாண் பட்ஜெட்டை அந்தத் துறையின் அமைச்சர் வினோத் தாக்கல் செய்து வருகிறார்.
அதில் இடம்பெற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி மதிப்பில் புதிய வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மற்றும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.
  • தஞ்சை மாவட்டம், சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடியில் உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்பு கல்லூரி அமைக்கப்படும்.
  • கோவை வேளாண்மை பல்கலைக்கழக.மாணவர் விடுதிகள் ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்.
  • நிலத்தடி நீரை பாதிக்கும் சீமை கருவேல மரங்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அகற்றும் பணிக்கு ரூ.4 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாட்டில் உள்ள 50 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடியில் மின்னணு விலைப் பலகைகள் அமைக்கப்படும். என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்