ஆன்லைன் மற்றும் செயலி மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறை இன்று(06-08-2026) முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. தமிழகத்தில் தற்போது 4 ஆயிரம் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகளில் எம்ஆர்பி-ஐ விட கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த பிரச்சினையை சரி செய்ய டாஸ்மாக் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் மதுபான விற்பனைக்கு தனி செயலி மற்றும் இணைதளம் இன்றுமுதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆன்லைன் முன்பதிவுக்கான இணையதளத்தில் நுகர்வோர் முதலில் தங்கள் அருகில் உள்ள கடையை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு தங்களுக்கு தேவையான மது வகையை தேர்வு செய்ய வேண்டும். பணம் செலுத்தும் பக்கத்தில் செல்போன் எண் கொடுத்து ஓடிபி பெற்று, அதை பதிவு செய்து, பணம் செலுத்த வேண்டும். இதையடுத்து, கியூஆர் குறியீடு கொண்ட ரசீது வரும், அதை நுகர்வோர் டவுன்லோட் செய்து, முன்பதிவு செய்த கடைக்கு சென்று கடை பணியாளரிடம் காண்பிக்க வேண்டும். கடை பணியாளர் கடையில் உள்ள கருவி முலம் முதலில் நுகர்வோரின் ரசிதை ஸ்கேன் செய்வார், பின்னர் நுகர்வோர் பதிவு செய்து வந்த மதுபானத்தை எடுத்து அதையும் ஸ்கேன் செய்வார், இரண்டும் சரியாக உள்ளது என உறுதியான பிறகு ரசீதை பிரிண்ட் செய்யும் பக்கம் வரும். அதில் ரசீதை பிரிண்ட் செய்து மதுபானத்தை நுகர்வோரிடம் வழங்குவார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Comments are closed.