‘ஜெயம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் ரவி.அந்தப் படம் மெகா ஹிட் ஆனதால் ஜெயம் ரவி என்று அழைக்கப்பட்டார். பின்னாளில் தனது பெயரை ரவி மோகன் என்று மாற்றிக் கொண்டார். இந்நிலையில் அவர்
இன்று( மே 16) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
இது என்னுடைய தனிப்பட்ட பேட்டி, இதற்கும் சினிமாவுக்கும் சம்பந்தம் கிடையாது. ரவி மிகவும் மென்மையானவர், அவர் எதைச் சொன்னாலும் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்துவிடுவார் என்று நினைத்துக் கொண்டார்கள். அதுதான் என்னுடைய கேரக்டர். ஆனால், ‘சாது மிரண்டால் காடு தாங்காது…’ சாதுவாக இருந்த என்னை நிறைய பேர் சீண்ட நினைக்கிறார்கள். இதுதான் என் அலுவலகம், இங்கே வாருங்கள். மறைமுகமாக இல்லாமல் நேரடியாக வாருங்கள். எனக்கு விவாகரத்து கிடைக்கும் வரை இனி என் படங்கள் வெளியாகாது. விவாகரத்து கிடைக்கும் வரை நான் இனி படங்களில் நடிக்க மாட்டேன். என்னால் நடிக்க முடியவில்லை. 23 ஆண்டுகள் இரவு பகலாக வேலை செய்துள்ளேன். என்னுடைய 95 சதவீத படங்கள் வெற்றியடைந்துள்ளன. என் குடும்பத்தைச் சீண்டினால் சும்மா விட மாட்டேன். 14 ஆண்டுகள் என் திருமண வாழ்க்கையில் நன்றாகத் தானே இருந்தேன். அதனை அவர்களே சொல்லியுள்ளனர். அதற்கான வீடியோ
ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. குழந்தைகளுக்காக 14 வருடங்கள் எல்லாவற்றையும் பொறுத்துக்கொண்டேன். இப்போது என் குழந்தைகளை பார்க்க விடமாட்டேன் என்கிறார்கள். என் பிள்ளைகள் இந்த வீடியோவைப் பார்க்க வேண்டும். என் பிள்ளைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 லட்சம் கல்விக் கட்டணம் கட்டி நான் இப்போது வரை படிக்க வைக்கிறேன்.
அத்தனை கோடிகளில் வீடு கட்டிக் கொடுத்தேனே, உங்களுக்காக தானே. இருக்கும்போது என்னை நன்றாக பார்த்துக் கொள்ளாதவர்கள் அவர்கள். அந்த வாழ்க்கை பிடிக்காமல் தானே தெறித்து ஓடி வந்தேன். ஒரு குழு அமைத்து, காசு கொடுத்து அவதூறு பரப்புகிறார்கள். சைபர் புல்லியிங் செய்து ஒரு பெண்ணை அனுப்பி விட்டார்கள். கெனிஷாவை காலி பண்ணி அனுப்பி விட்டார்கள். அதற்காகவெல்லாம் இந்தப் பேட்டி கொடுக்கவில்லை. யாருக்கு அநீதி நடந்தாலும் குரல் கொடுப்பேன். நான் இப்போது வாடகை வீட்டில் உள்ளேன். அவர்கள் கோடிக்கான ரூபாய் மதிப்புடைய வீட்டில் நன்றாகவே உள்ளார்கள். வெளியே போங்கள் என்று சொல்ல எவ்வளவு நேரம் ஆகும். ஒரு மனிதனுக்கு கஷ்டம் வரும்போதுதான் யார் கூட இருப்பார்கள் என்பது தெரியும். அப்படி என்கூட நின்ற பெண் தான் கெனிஷா. ஒரு பெண் என்னை புரிந்துகொண்டார். நான் பார்க்காத பெண்களா?. என் வேலையே அழகான பெண்களுடன் நடிப்பதுதான். அழகில் மயங்கி அப்படியே நான் போய்விட்டேனா. அவர்களுக்கு ஒரு காரணம் தேவை. இதனை பிடித்துக்கொண்டார்கள். ஒரு கரும்புள்ளி கூட இல்லாமல் 23 வருடங்கள் சினிமாவில் இருந்துள்ளேன்.சொல்ல முடியாத அளவுக்கு எனக்கு அநியாயம் நடந்தது. நான் உயிரோடு இருக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம். அதற்காக குழு அமைத்து வேலை செய்கிறார்கள்.மூன்றெழுத்து இட்லி நடிகை என் வாழ்க்கையை கெடுக்கும் வேலைகளைச் செய்து வருகிறார். என்னைப் பற்றி பேச அவருக்கு என்ன அருகதை உள்ளது. பல பிரச்சினைகளை தாண்டி, ஒரு பெண் என்னை புரிந்து கொண்டார். அவரை இப்போது துரத்துவிட்டு விட்டார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.