திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கழக முதன்மைச் செயலாளரும், சட்டமன்றத் துணைத் தலைவருமான கே.என்.நேரு தனது தொகுதிக்குட்பட்ட தில்லைநகர், உறையூர், அரவானூர், லிங்கநகர், நாடார் தெரு, தியாகராய நகர், பாத்திமா நகர், வெக்காளியம்மன் கோவில் தெரு, முஸ்லிம் தெரு, பாண்டமங்கலம் ரோடு, நவாப் தோட்டம், அண்ணாமலை நகர், தென்னூர் பட்டாபிராமன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நேரில் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அவருடன் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மேயருமான மு.அன்பழகன், பகுதி செயலாளர்கள் இளங்கோ, கமல் முஸ்தபா, நாகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் விஜயா ஜெயராஜ், டோல்கேட் சுப்பிரமணி, சோழன் சம்பத், முத்து, பழனி, வீரமணி, ஹரி, தனபால், திருநாவுக்கரசு, விவேக், தகவல் தொழில் நுட்ப அணி அருண் கோவிந்தன், வழக்கறிஞர்கள் அந்தோணி, கவியரசன், மணிவண்ண பாரதி, மதனா, பீமநகர் சதீஷ், விஜய், துரை, மனோஜ் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Comments are closed.