Rock Fort Times
Online News

விராலிமலை, துவரங்குறிச்சிக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு மாணவர்கள் சாலை மறியல்…!

திருச்சியிலிருந்து விராலிமலை மற்றும் துவரங்குறிச்சி பகுதிக்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகளவு சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கல்லூரி முடிந்ததும் போதிய பஸ் வசதி இல்லாததால் இரவு வரை காத்திருந்து பேருந்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆகவே, மேற்கண்ட பகுதிக்கு கூடுதல் பேருந்து வசதி கேட்டு திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேதுராப்பட்டி சாலையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இன்று (ஜூலை 3) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். உங்களது கோரிக்கை குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், இந்த பிரச்சனை தொடர்ந்து நீடித்து வருகிறது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல விராலிமலை, துவரங்குறிச்சி பகுதிகளுக்கும் மாணவர்களின் நலன்கருதி கூடுதல் பேருந்துகள் இயக்க போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்