Rock Fort Times
Online News

த.வெ.க.ஆட்சிக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு…!

புதி​தாக ஆட்சி பொறுப்​பேற்​றுள்ள முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு மீதான பெரும்பான்மையை நிரூபிப்​ப​தற்​கான வாக்​கெடுப்பு சட்டப்​பேர​வை​யில் இன்று (மே 13) காலை 9.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு கட்சி எம்எல்ஏக்களும் பேசி வருகின்றனர். மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பதன் அடிப்படையில் தவெக அரசுக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கிறது என்றும், பாஜக தமிழகத்திற்குள் நுழைவதை தடுப்பதற்காகவும், மதச்சார்பற்ற ஆட்சிக்காகவும் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவிப்பதாக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார் பேசினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் செல்லசுவாமி, “தவெக அரசுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார். விசிகவின் வன்னியரசு பேசுகையில், “விசிக உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்த இந்த அரசு 5 ஆண்டுகள் நீடிக்க வேண்டும்.பாஜக மறைமுகமாக ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்று தெரிவித்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் ஷாஜஹான், மத்திய பாஜக அரசின் சித்து விளையாட்டில் தமிழ்நாடு சிக்கி விடக் கூடாது என்பதற்காக தவெக அரசுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்றார். மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ், “நேற்றே இந்த அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன். இன்றும் ஆதரவு கொடுக்கிறேன். நாளையும் ஆதரவு கொடுப்பேன். ஆதரவு என்று கூறியதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன். தமிழ்நாட்டின் மக்கள் அனைவரையும் காப்பாற்றும் முதலமைச்சர் விஜய் என்னையும் காப்பாற்றுவார். எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். மன்னார்குடி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்த முதல்வர் எனக்கு உதவ வேண்டும் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் தளி ராமச்சந்திரன், “ஆளுநர் வழியாக பின்புறம் மூலம் பாஜக ஆட்சி அமைத்து விடக் கூடாது என்பதால் தவெகவுக்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார். தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்