Rock Fort Times
Online News

முதல்வர் விஜய் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என்றால் அடுத்து என்ன நடக்கும்?

நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது ஒரு மாநில சட்டமன்றத்தில் ஆளும் அரசுக்கு தேவையான பெரும்பான்மை இருக்கிறதா? என்பதைத் தீர்மானிக்க இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு அரசியலமைப்பு வழிமுறையாகும். இது பெரும்பாலும் அரசியல் நிச்சயமற்ற நிலையின் போதோ அல்லது தொங்கு சட்டமன்றத்திற்குப் பிறகோ செயல்படுத்தப்படுகிறது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மாநில முதலமைச்சர் தனது ஆதரவை நிரூபிக்க வேண்டும். சட்டமன்றத்தில் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி அல்லது கூட்டணி நிரூபிக்க முடியாமல் போனால் என்ன நடக்கும் என்பதை காண்போம்.

ஆட்சி கவிழ்தல்: 

தற்போதைய அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியுற்றால் அல்லது புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால் உடனடியாக அந்த ஆட்சி கலைக்கப்படும். முதலமைச்சர் உடனே பதவி விலக வேண்டும்.

ஜனாதிபதி ஆட்சி:

சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் ஏற்பட்டால் அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படும்.

மறு தேர்தல்: 

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்திய பிறகு, அடுத்த 6 மாதம் கழித்து வேறு வழியில்லாத பட்சத்தில், சட்டசபை கலைக்கப்பட்டு மாநிலத்தில் மறு தேர்தல் அறிவிக்கப்படும்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்