Rock Fort Times
Online News

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு- பொன்முடி உள்ளிட்ட 7 பேரும் விடுவிப்பு…!

தமிழகத்தில் கடந்த 2006-2011ல் திமுக அமைச்சரவையில் கனிமவளத்துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது, பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் அள்ளியதாகபொன்முடி உட்பட 7 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.அளவிற்கு அதிகமாக மண் அள்ளியதால் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், போதிய சாட்சிகள் இல்லை எனக்கூறி வழக்கில் இருந்து பொன்முடி, அவரது மகன் உள்ளிட்ட 7 பேரையும் விழுப்புரம் நீதிமன்றம் விடுவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்