Rock Fort Times
Online News

அரசு பேருந்துகளில் ‘மகளிர் விடியல் பயணம்’ பெயர் மாற்றத்திற்கு திமுக எதிர்ப்பு !

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவர் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் போக்குவரத்து கழகத்திலும் மாற்றம் கொண்டு வந்துள்ளார். இதுவரை ‘அரசு போக்குவரத்துக் கழகம்’ என்று இருந்ததை ‘தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளார். அடுத்த கட்டமாக அரசுப் பேருந்துகளில் ‘மகளிர் விடியல் பயணம்’ என்று இருப்பதை ‘மகளிர் பயணம்’ என்று மாற்றப்பட்டுள்ளது. முந்தைய திமுக ஆட்சியில், ‘மகளிர் விடியல் பயணம்’ என்று திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், அந்தத் திட்டம் மாற்றப்படாமல் பெயர் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு திமுக தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தவெக அரசு வெறும் பெயர் மாற்றத்துக்கான கட்சியாக மட்டுமே உள்ளது. திமுக அரசு வைத்த எல்லா பெயர்களையும் மாற்றுவதையே நோக்கமாக கொண்டுள்ளனர். மற்ற திட்டங்களையும் எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தவெக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்