Rock Fort Times
Online News

ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக வருண்குமார் ஐபிஎஸ் நியமனம்…!

தமிழகத்தில் இன்று(09-07-2026) 3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் . இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள  செய்தி குறிப்பில், சென்னை சிபிசிஐடி டிஐஜியாக இருந்த வருண்குமார் ஐபிஎஸ், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை டிஐஜியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த விக்ரமன் ஐபிஎஸ், வருண்குமாருக்கு பதிலாக சென்னை சிபிசிஐடி டிஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரகுபதி ஐபிஎஸ் பள்ளிக்கரணை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்