Rock Fort Times
Online News

விஜயை விட்டு பிரிகிறார் சங்கீதா- விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு…!

தவெக தலைவர் விஜயின் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் விஜய்க்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் நடிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார் விஜய். அவரது கடைசி படம் ஜனநாயகன். பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்சார் போர்டு பிரச்சனையால் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் பணிகளில் விஜய் தீவிரம் காட்டி வருகிறார்.  விஜய்க்கும், இலங்கைத் தமிழ்ப் பெண்ணான சங்கீதாவுக்கும், 1999-ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஜேசன் என்கிற ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜேசன் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.இந்நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் விஜயின் மனைவி சங்கீதா, விவாகரத்து கோரி, செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.இந்த வழக்கில் ஏப்ரல் 20ம் தேதி விஜய் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.அவரின் இந்த முடிவுக்கு ஒரு நடிகையுடன் விஜய் வைத்துள்ள தொடர்பே காரணம் என்று கூறப்படுகிறது. சங்கீதாவின் இந்த திடீர் முடிவு விஜய் ரசிகர்கள் மற்றும் கட்சித் தொண்டர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்