Rock Fort Times
Online News

ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் 3 போ் கைது

Kumbakonnam 3 arrested online prostitution

 

கும்பகோணம் அஞ்சுகம் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன்   மூலம் பாலியல் தொழிலில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களிடமிருந்து  மூன்று இருசக்கர வாகனங்களும், ஆறு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கும்பகோணம் அஞ்சுகம் நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் உத்தரவுபடி கும்பகோணம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார் தலைமையில் நேற்று இரவு தனிப்படை காவல்துறையினர் ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு அஞ்சுகம் நகரில் பாலியல் தொழில் நடைபெற்ற வீட்டில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனா். அப்போது ஆன்லைன் மூலம் பாலியல் தொழில் நடத்திய பரமேஸ்வரன், ரம்யா, பிரேமி ஆகிய மூன்று பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர் . மேலும் பாலியல் தொழிலில் ஈடுபட்ட இரு பெண்களை மீட்டு தஞ்சாவூரில் உள்ள அரசு காப்பகத்திற்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும் இவர்கள் பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்கள் , ஆறு செல்போன்கள் ,பத்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து கும்பகோணம் தாலுகா காவல் துறையினா் வழக்கு பதிவு செய்து பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்த மூன்று பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணம் முக்கிய நகர்களில் ஒன்றான அன்னை அஞ்சுகம் நகரில் குடும்பம் நடத்துவது போல் வாடகைக்கு வீடு எடுத்து பாலியல் தொழில் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

 

 

1 Comment
  1. mitolyn reviews says

    **mitolyn reviews**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்