Rock Fort Times
Online News

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற வேண்டுமா? * தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்..!

இளம் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க தமிழகத்தில் இன்று (10-10-2026) சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

எஸ்.ஐ.ஆர் பணிகள் நிறைவடைந்துள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில், இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை பதிவு செய்வதற்கான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இளம் மற்றும் முதல்முறை வாக்காளர்களாக தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்காக, தேவைக்கேற்ப மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் இன்று சனிக்கிழமை நடத்தப்படும். நகர்ப்புறப் பகுதிகள் மற்றும் பெருநகரங்களுக்குச் சிறப்புக் கவனம் அளிக்கப்படும். தகுதியுடைய இளம் மற்றும் முதல் முறை வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு வசதியாகவும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் கல்வியறிவுச் குழுக்களின் சேவைகள் திறம்பட பயன்படுத்தப்படும். சிறப்பு நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை ஆய்வு செய்து கண்காணிப்பதற்கும். அறிவுறுத்தல்களைத் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், வாக்காளர் பதிவு அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் தொடர்ந்து கூட்டங்களை நடத்துவார்கள்” என்று கூறியுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்