Rock Fort Times
Online News

மஹாளய அமாவாசையை முன்னிட்டு ஸ்ரீரங்கம், அம்மா மண்டபத்தில் குவிந்த பொதுமக்கள்…* முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு..!

புரட்டாசி அமாவாசையை மகாளய அமாவாசை என்றும், அதற்கு முந்திய பதினைந்து நாட்களை மகாளய பட்சம் என்றும் சொல்வர். இந்த நாட்களில் பிதுர்லோகத்தில் வாழும் நம் முன்னோர்கள் ஆசி
வழங்க பூமிக்கு வருகின்றனர். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவர்களது ஆசி நமக்கு கிடைக்கும் வகையிலும் தர்ப்பணம் செய்வது நம்
கடமை. அந்தவகையில் புரட்டாசி மகாளய அமாவாசை தினமான இன்று(அக்டோபர் 10) திருச்சி, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிய தொடங்கினர்.

இன்று(சனிக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறை, அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை படித்துறைகளில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். சிலர் அன்னதானமும் வழங்கினர்.

பின்னர், அருகில் உள்ள அரங்கநாதர் சுவாமி கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன் உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

ராமேஸ்வரம்,

மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு கோவில்களில், நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்