Rock Fort Times
Online News

இந்து சமய அறநிலையத்துறை தொடர்பான புகார்களை இனி ஆன்லைனில் தெரிவிக்கலாம்…- அமைச்சர் ரமேஷ்..!

தமிழக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ரமேஷ். இவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளைத் தெரிவிக்க எனது பிரத்தியேக இணையதளத்தை அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  https://tvkramesh.in இந்த இணையதளத்தின் வாயிலாகப் பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே தங்களது புகார்கள், கோரிக்கைகள் மற்றும் கருத்துகளை எளிதாக பதிவு செய்யலாம். மேலும், தங்களது மனுக்கள் மீதான நடவடிக்கைகளின் நிலையை அறிந்து கொள்ளவும் வழிவகை செய்யப்படும். அதேபோல
புகார்கள் மற்றும் கோரிக்கைகளைத் தெரிவிக்க

+91 98430 88410,
+91 86810 88410

இந்த எண்கள் வாயிலாகவும் ஸ்ரீரங்கம் தொகுதி பொதுமக்கள் தங்களது புகார்கள் மற்றும் கோரிக்கைகளை உரிய ஆதாரங்களுடன் எனது அலுவலகத்திற்குத் தெரிவிக்கலாம். அவற்றின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாயிலாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். மக்களின் குரலுக்குச் செவிசாய்ப்போம்! மக்களின் குறைகளைத் தீர்ப்போம்! மக்கள் சேவையில் தொடர்ந்து பயணிப்போம்! வெற்றி நிச்சயம்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்