Rock Fort Times
Online News

யானை புத்துணர்வு முகாம் தோழிகள் திருவானைக்காவலில் குதூகலம்!

திருச்சி மலைக்கோட்டையில் யானை லெட்சுமி தங்கும் இருப்பிடத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கிறது . அங்கு தங்க இடமில்லாத நிலையில் மலைக்கோட்டை யானை லெட்சுமி சில நாட்கள் தங்குவதற்காக திருவானைக்காவல் கோவிலுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது. திருவானைக்காவல் கோயிலுக்கு வந்த யானை லட்சுமியை பார்த்ததும் திருவானைக்காவல் யானை அகிலா மகிழ்ச்சியில் பிளிறியது. இரண்டு யானைகளும் ஏற்கெனவே புத்துணர்வு முகாமில் ஒன்றாக தங்கி இருந்தனர் . தற்போது இரண்டு யானை தோழிகளும் மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர். இங்குள்ள குளத்தில் இருவரும் குதூகலமாக குளித்தனர். குளிப்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்ற னர். விருந்தாளியாக வந்துள்ள மலைக்கோட்டை யானை லெட்சுமிக்கு திருவானைக்கா கோயில் உதவி ஆணையர் ரவிச்சந்திரன் பழங்களை வழங்கினார்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்