இன்ஜினியரிங் புராஜெக்டுகளை எளிதாக கையாள புதிய வெப்சைட் துவக்கம்! திருச்சி எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் விளக்கம்…
திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டுவரும் எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் நிறுவனம், பொறியியல் மற்றும் கட்டுமானத் துறைகளில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுக்கும் நோக்கில் http://www.mifcortex.com (எம்.ஐ.எஃப் கார்டெக்ஸ்) என்கிற புதிய வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளது. இதற்கான அறிமுக விழா திருச்சி கோர்ட்யார்ட் ஹோட்டலில் நடைபெற்றது. வர்த்தக யுக்தி ஆலோசகர் எம்.கே.பரமேஷ்வரன் தலைமை தாங்கினார். எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனீர் ஐபிஎன் ஃபவாஸ் முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில் பேராசிரியர்கள் கே.வி.நித்யானந்தா, முகமது ஆசாத், துரைசெல்வம், எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் பொதுமேலாளர் ஹெச்.இளையராஜா ஆகியோர் க்ளவுட் வெப்சைட் குறித்த விளக்கவுரை ஆற்றினர். இதில் பல்வேறு கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள், சிவில், மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் பொறியியல் நிறுவன பிரதிநிதிகள், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர். இதுகுறித்து எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் மேலாளர் பகத்சிங் நாகராஜன் பேசும்போது., கிளவுட் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த தளம், பொறியாளர்கள், ஒப்பந்ததாரர்கள், ஆலோசகர்கள், திட்ட மேலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை ஒரே டிஜிட்டல் தளத்தில் இணைத்து, திட்டங்களை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. திட்ட மேலாண்மை, ஆவணப் பகிர்வு, நேரடி தகவல் பரிமாற்றம், குழு ஒருங்கிணைப்பு, பணிகளின் முன்னேற்றக் கண்காணிப்பு போன்ற வசதிகள் இந்த தளத்தில் இடம்பெற்றுள்ளன.

இதன் மூலம் தகவல் பரிமாற்ற தாமதம் குறைவதுடன், திட்டங்களை திட்டமிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றவும், செலவினங்களை கட்டுப்படுத்தவும் நிறுவனங்களுக்கு உதவுகிறது. கட்டுமான நிறுவனங்கள், உற்பத்தித் துறைகள், உட்கட்டமைப்பு திட்டங்கள், மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இந்த தளம் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை எம்.ஐ.எஃப் டெக்னாலஜிஸ் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.