Rock Fort Times
Online News

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 4 பேர் கைது!

உறையூர்,கோட்டை, பாலக்கரை, பொன்மலை பகுதிகளில் கஞ்சா, லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் போலீசார் ஆங்காங்கே கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கோட்டை பகுதியில் கஞ்சா விற்றதாக பாண்டியன் (வயது 23) என்பவரை போலீசார் கைது செய்தனர். பாலக்கரை பகுதியில் கஞ்சா விற்றதாக நவலடியான், சூர்யா ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. காந்தி மார்க்கெட் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றதாக பழனியம்மாள் (வயது 53) என்ற பெண்ணை கைது செய்தனர்.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்