திருச்சியில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் மீது சரமாரி தாக்குதல்: திமுகவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்…! ( வீடியோ இணைப்பு)
திருச்சி மிளகுபாறையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆர்த்தோ (எலும்பு, மூட்டு பிரிவு) மருத்துவராக பணியாற்றி வருபவர் கார்த்திகேயன். இந்நிலையில் இன்று(5-11-2024) பத்துக்கும் மேற்பட்ட கும்பல் மருத்துவமனை வளாகத்தில் புகுந்து மருத்துவர் கார்த்திகேயனை சரமாரியாக தாக்கியது. இதில் மருத்துவரின் காது கிழிந்து உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டது. தற்போது அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இ எஸ் ஐ மருத்துவமனை வளாகத்திற்கு வெளியே காரை திருப்பும்போது, இண்டிகேட்டர் போடாமல் திருப்பியதால் மருத்துவருக்கும், மற்றொரு காரில் வந்த கருமண்டபத்தைச் சேர்ந்த திமுகவை சேர்ந்த பிரவீன் மற்றும் அவரது குடும்பத்தினரும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி பின்னர் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், ஆட்டோவில் வந்த பிரவீன் ஆதரவாளர்கள் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை வளாகத்திலேயே அரசு மருத்துவர்மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.
அரசு மருத்துவர் மீதான கொலைவெறி தாக்குதல் சம்பவம் தொடர்பாக காவல்துறை தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், நாளையதினம் மருத்துவர்கள் புறநோயாளிகள் பிரிவு பணியினை முடித்துவிட்டு போராட்டத்தில் ஈடுபட போவதாக அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.