Rock Fort Times
Online News

ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் ரூ.50 ஆயிரம் லாபம் ! பின்னணிப் பாடகி சித்ரா பெயரில் சைபர் மோசடி !

சோசியல் மீடியாவின் தாக்கம் எப்போது அதிகமாக ஆரம்பித்ததோ, அப்போதிருந்தே பிரபலங்களின் பெயரால் பல்வேறு விதமான மோசடிகளும் நடக்க தொடங்கிவிட்டன. அதை நம்பி ரசிகர்களும் ஏமாறுவது உண்டு. அந்த வகையில் தற்போது பிரபல பின்னணி பாடகி சித்ராவின் பெயரில் சமூக வலைதளத்தில் சில மர்ம நபர்கள் பண மோசடி விளம்பரம் ஒன்றை பதிவிட்டுள்ளனர். அந்த பதிவு கூறுவது போல வெளியிடப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் தூதராக சித்ரா இருப்பதாகவும், பத்தாயிரம் டெபாசிட் செய்து பங்குகளைப் வாங்கினால் அதன் மதிப்பு ஒரு வாரத்தில் ரூ.50 ஆயிரம் வரை உயரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இக்குறிப்பிட்ட பங்குகளில் முதலீடு செய்யும் ரசிகர்களுக்கு ஐ போன் பரிசாக தருவதாகவும் சொல்லப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் குறித்து தனது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலமாக கேள்விப்பட்ட பின்னணிப் பாடகி சித்ரா, உடனடியாக, இது தன்னுடைய பெயரை பயன்படுத்தி நடக்கும் மோசடி என்றும், இதை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்