Rock Fort Times
Online News

திருச்சி பொன்மலை ஒர்க் ஷாப்பில் ஆயுத பூஜை கொண்டாட்டம்: முன்னாள் ஊழியர்கள் 65 பேர் கௌரவிப்பு…!

திருச்சி, பொன்மலை ஒர்க் ஷாப்பில்  பலவகை ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகள் பழுது பார்த்தல், புதிதாக தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இங்கு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.  இங்கு  ஆயுத பூஜை சிறப்பாக கொண்டாடப்பட்டது.  இதில், இங்கு டீசல் ஷாப் எலக்ட்ரிக்கல் ஒயரிங் செக்க்ஷனில் பணியாற்றி 10 வருடங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரிகள், ஊழியர்கள் என  65 பேர்  அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு தலைமை பொறியாளர் கண்ணன் மற்றும் சங்கர், சீனிவாசன், தொழிற்சங்க பிரதிநிதிகள் சரவணகுமார், பாலமுருகன்  ஆகியோர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.  சிறப்பு  அழைப்பாளராக முன்னாள் முதுநிலை பொறியாளர் சென்னை லோகநாதன் பங்கேற்றார். விழாவில்  ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஊழியர்கள் என 65 பேர் பங்கேற்றனர்.  பின்னர் அவர்கள் தங்களது மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். விழா நிகழ்ச்சிகளை  முன்னாள் ஜூனியர் என்ஜினியர் சந்திரசேகரன் ஒருங்கிணைத்தார்.

🔴ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் திருநாள் (டோலோத்சவம்) || 3ம் நாள் || சிறப்பு தொகுப்பு ||

1 of 901

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்