Rock Fort Times
Online News

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் நண்பருடன் குளித்துக் கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி வாலிபர் பலி…!

திருச்சி மாவட்டம் சமயபுரம் இந்திரா காலனி பெரியார் தெருவை சேர்ந்தவர் ஜலாலுதீன். இவரது மகன் ஷேக் அப்துல்லா(21). இவர் தனது உறவினர் மற்றும் நண்பருடன் ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.  அப்போது ஆழமான பகுதிக்கு  ஷேக் அப்துல்லா சென்றதால் நீரில் மூழ்கினார்.
உடனே நண்பர் மற்றும் உறவினர் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.  பின்னர், இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கும், உறவினர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.  தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து  ஷேக் அப்துல்லாஹ்வின் உடலை மீட்டனர். ஆனால், அவரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது.  அவரது உடலை ஸ்ரீரங்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா மற்றும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்